50 ஆண்டுகளுக்கும் மேலாக, வியாசர்பாடியில் உள்ள எளிமையான அன்பான மற்றும் இரக்கமுள்ள தொன்போஸ்கோ நிறுவனம், வடச்சென்னை வியாசர்பாடி பகுதிவாழ், ஏழ்மையிலும் ஏழ்மையான ஏழைகளுக்கான புகலிடமாக, ஒரு உணவுக்கூடமாக, ஒற்றைப் பெற்றோர் மற்றும் பெற்றோரில்லா அனாதை பிள்ளைகளுக்கான ஒரு வீடாக, சிறார்-சிறுமிகளுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் கல்வி தரும் ஒரு பள்ளியாக, இளையோர்கள் ஒன்றுக்கூடி மகிழும் இடமாக, ஒரு விளையாட்டு திடலாக, ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தரும் இல்லமாக, மழலையர் பகல் காப்பகமாக, பெண்களுக்கு திறன்-கற்றல், குழுவாக தொழில் செய்தல் பயிற்சிநிலையமாக, ஏழை எளிய மக்கள் அனைவரையும் வரவேற்க்கும் ஒரு மையமாக, ஒன்றிணைக்கும் உணர்வுப்பூர்வமான இதயமாக இருந்து வந்திருக்கிறது. சலேசியர்களின் இந்த அன்புச்சேவைப் பயணத்தில், ஆயிரக்கணக்கான கனிவான மக்கள் உதவியுள்ளனர்.
எங்கள் குறிக்கோள் – “தனித்து மகிழ்ந்திருக்க யாருக்கும் உரிமை இல்லை”
வியாசர்பாடி பகுதி, ஒரு காலத்தில் போக்கிரிதனம், முரட்டுத்தனம், வன்முறை மற்றும் குற்றங்களுக்காக அறியப்பட்ட ஒரு பரந்த சேரிப் பகுதியாக இருந்தது. வேலைத்தேடி பலர் கூலித் தொழிலாளர்களாகவும், பர்மாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் அகதிகளாக குடியேறிய இடமாகவும் இருந்தது. மேலும், கானா இசை, ஹிப்-ஹாப் நடனம், கால்பந்து விளையாட்டு, மற்றும் வித்தியாசமான சுவையுள்ள உணவு ஆகியவற்றிற்கும், இது பெயர் பெற்றது. தொன்போஸ்கோ பேறுபெற்றோர் இல்லம், வியாசர்பாடி வரலாற்றின் ஒரு முக்கிய அங்கமாகவும், இருகிறது.